×

தெலுங்கானாவில் வேகமாக பரவும் மர்ம நோய்; சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்..!!

தெலுங்கானா: தெலுங்கானா மலைக்கிராமத்தில் மர்ம நோய் வேகமாக பரவும் நிலையில், போதிய சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் அவலநிலை நீடிக்கிறது. தெலுங்கானா மாநிலம் உலுக்கு மாவட்டத்தில் உள்ள சீதாராம்புரத்தில் திடீர் வாந்தி, மயக்கம், கடும் சோர்வால் பழங்குடியினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், லக்சிமய்யா என்பவரும் நோயால் அவதிப்பட்டுள்ளார்.

போதிய சாலை வசதி இல்லாததால் அவரை டோலி கட்டி ஆர்ப்பரித்துச் செல்லும் ஆற்றின் நடுவே கிராமத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சீதாராம்புரம் கிராமத்தில் பலரது வீடுகளில் மர்ம நோய் பாதிப்புகள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கனமழை உள்பட மோசமான வானிலை காரணமாக சுகாதாரத்துறையினர் அங்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post தெலுங்கானாவில் வேகமாக பரவும் மர்ம நோய்; சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Doli Katti Hospital ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...